News - Kalam Nanbargal Associates

மாணவனின் மருத்துவ சிகிச்சைக்காக ரூ,3,000 நிதி உதவி செய்யப்பட்டது

உஸ்மான் என்னும் 14 வயது மாணவன் காக்கா வலிப்பு நோயால் மிகவும் பாதிப்படைந்து இருந்தான் . கூலி வேலை பார்க்கும் பெற்றோர்கள் என்பதால் முழுமையாக அந்த மாணவனுக்கு மருத்துவ சிகிச்சை செய்ய முடிய வில்லை. வலிப்பு அதிகமான போது கீழே விழுந்து கை உடைந்து விட்டது.. அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் . தற்போது எட்வின் மருத்துவமணை திருச்செந்தூர் ல் மிகவும் கவலைக்கிடமாக இருக்கின்றான் என்றும் காலம் நண்பர்கள் இயக்கத்திற்கு தகவலும் உதவி செய்ய வேண்டும் என்று விண்ணப்பமும் வந்தது. ஏதன் அடிப்படையில் சிறுவனுக்கு உதவும் நோக்கத்தில் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.வெங்கட சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் சிறுவனின் பெற்றோர்களை சந்தித்து (26-06-2017) அன்று ரூ.3,000 நிதி உதவி செய்யப்பட்டது. உதவின அனைவருக்கும் நன்றிகளுடன்வாழ்த்துக்கள் .